தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா.
சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் நடிகர் வசந்த் ரவி பேசியதாவது…
இந்திரா படம் ஒவ்வொரு நொடியும் உங்களை மகிழ்விக்கும். என் படம் என்பதால் சொல்லவில்லை, உண்மையிலேயே மிக வித்தியாசமான படம். சபரீஷ் கதை சொன்ன நொடியிலிருந்து படம் முடித்து வரும் வரை, படத்தில் உழைத்த அனைவரும் ஒரே உணர்விலிருந்தோம். படம் மிக அழகாக வந்துள்ளது. மெஹ்ரீன் நிறையத் தெலுங்கு படம் செய்துள்ளார் இந்த கேரக்டர் அழுத்தமானது எப்படிச் செய்வார் என்று நினைத்தோம் ஆனால் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சுனில் சார் பற்றிச் சொல்லத் தேவையில்லை, அவர் தெலுங்கில் பண்ணாத ரோலே இல்லை, ஆனால் இது கண்டிப்பாக அவருக்கு வித்தியாசமான ரோலாக இருக்கும். அவர் மாதிரி ஒரு ஹம்பிளான மனிதரைப் பார்க்கவே முடியாது. அவர் மாதிரி இந்த ரோலை யாருமே செய்திருக்க முடியாது. டிரைடண்ட் ரவி சார் உள்ளே வந்த போது, எல்லோருக்குமே பெரிய நம்பிக்கை வந்தது அவருக்கு நன்றி. ஜாஃபர் சகோதரருக்கு நன்றி. என் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்க வேண்டும் என நினைத்துத் தான் செய்கிறேன். தரமணி, ராக்கி, ஜெயிலர் மாதிரி இந்திரா முக்கியமான படமாக இருக்கும். இது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரில்லராக இருக்கும். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், எல்லோரும் தியேட்டரில் வந்து பாருங்கள் நன்றி.


