சியர்ஸ் மியூசிக் நிறுவனத்துடன் கைகோர்த்த ஆரி அர்ஜுனன்

 சியர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள கிம்ச்சி தோசா என்ற மியூசிக் வீடியோ ஆல்பம் விநாயகர்  சதுர்த்தி அன்று வெளியாகியுள்ளது.. இந்நிறுவனம் சின்னத்திரையில் பல ஷோகளை தயாரித்து கொண்டிருக்கிறது, குறிப்பாக வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை  தயாரித்து வருகிறது.

 இந்த கிம்ச்சி  தோசா இசை வீடியோ ஆல்பம்  மூலம் தனது இசை கம்பெனியான Cheers music என்ற ஆடியோ லேபிள் நிறுவனத்தை  அறிமுகம்  செய்கிறது.. இந்த பாடல் இந்தோ கொரியன் கொலாபரேஷனில் உருவாகியுள்ளது..    

 இந்த சியர்ஸ் மியூசிக் நிறுவனம் துவங்கியது பற்றி நிறுவனர் அபிலஷா கூறுகையில்,

இசை கலைஞர்களின் கனவுகளை நினைவாகவே இந்நிறுவனம் துவங்கியுள்ளோம் , இதன் மூலம் பல புது இசை அமைப்பாளர்கள் பாடகர்கள், பாடலாசிரியர் என திறமையான பலரையும் அறிமுகம் செய்ய உள்ளோம்..

தமிழ் மட்டுமல்லாமல் இந்திய மொழியையும் தாண்டி உலகளவில் மியூசிக் ஆல்பத்தை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது..

இந்த கிம்ச்சி தோசா ஆல்பத்தை இசையமைத்து நடித்தும் இருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் தரன்,

இந்தியாவின் மிக சிறந்த ஒளிப்பதிவாளர்களில்  ஒருவரான ரவிவர்மன் ASC ISC அவர்களின் ஒளிப்பதிவு இப்பாடலுக்கு பக்க பலமாக உள்ளது, அதேபோல் இந்தியாவின்  முன்னணி  புரொடக்சன் டிசைனர் முத்துராஜ் அவர்களின் கலை வடிவமைப்பும்   ,  ரூபன் பட தொகுப்பு மற்றும்  TDC நடனமும் இந்த இசை ஆல்பத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது

  ஆரி அர்ஜுனன் முதன்முறையாக இதுபோன்ற  இசை ஆல்பத்தில் நடித்துள்ளார் , இவருடன் சேர்ந்து கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் , இசையமைப்பாளர் தரன், தென்கொரியாவில் புகழ்பெற்ற AA பேண்டின்  பாடகர் அவுரா, மற்றும் குடும்பஸ்தன் படத்தின் கதாநாயகி சான்வி ஆகியோர் நடித்துள்ளார்..

இந்த தென்கொரியா பாடகர் அவுரா முதல் முதலாக ஐடெல் குரூப் டபுள் ஏ மூலம் அறிமுகமானார் பிறகு தனியாக சோலோ ஆல்பம்கள் பாட ஆரம்பித்தார்..

எங்கள் இந்த இசை கம்பெனியின் மூலம் உலக அளவில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள கலாச்சாரம் சார்ந்த  இசையை தரயிருக்கிறோம்.. இதன் மூலம்,  உள்ளூரின் உள்ள திறமையான இசை கலைஞர்களை, உலக அளவிலான பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க உள்ளோம்.

இசை என்பது வெவ்வேறு நாட்டின் மொழி, கலாச்சாரம், எல்லைகள் என அனைத்தையும் தாண்டி நாம் அனைவரும் ஒன்றிணைய ஒரு பாலமாக இசை இருக்கும் என்கிறார் CHEERS MUSIC நிறுவனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *