
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயிலில் உள்ள பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது.
கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
வெற்றி பெற்றவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் அவர்களையும் சமீபத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.