தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராககாரணம்..: விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் K இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க,  இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”.

இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில், விஷ்ணு விஷால் பேசியதாவது..,

“எனக்கு இந்த இடம் கிடைக்க காரணம் பத்திரிக்கை நண்பர்கள் தான் நன்றி. க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக ராட்சசன் உடன் கம்பேர் செய்வார்கள் அதை தடுக்க முடியாது. எல்லா மொழியிலும் திரில்லர் வந்தால் ராட்சசன் படத்தோடு ஒப்பிடுவார்கள். நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். அதை மீற முடியாது. ஆனால் நாங்கள் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்துள்ளோம். கோவிட் சமயம் ஆரம்பித்த படம் இது. ஐந்து வருடம் ஒரு படத்திற்காக பிரவீன் உழைத்துள்ளார். இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனில் அமீர் சார் நடிப்பதாக இருந்தது. அவரே கதை கேட்டு பாராட்டிய போது, எங்களுக்கு பெரிய உற்சாகம் வந்தது. இந்தப்படம் தமிழிலேயே எடுப்போம் என முடிவு செய்தேன். பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது. ரூட்டடாக எடுத்த படங்கள் தான் பான் இந்திய படமாக மாறியுள்ளது. அதனால் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கலாம் என எடுத்துள்ளோம். இப்படத்தில் எனக்காக எல்லோரும் உழைத்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள்  200 சதவீத உழைப்பை தந்துள்ளனர். என் மனைவி ஜிவாலாவிற்கு நன்றி. ஒரு புது விஷயம் முயற்சி செய்துள்ளோம். நீங்கள் தரும் பாராட்டுக்கள் தான் எனக்கு புது விஷயங்கள் செய்ய ஊக்கமாக உள்ளது. இந்தப்படம் பொறுத்த வரை செல்வா சார் தான் ஹைலைட். இப்படத்தில் நடித்தற்கு நன்றி சார்.  தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக,  உங்கள் உழைப்பும் ஒரு காரணம். இப்படத்தில் நடித்ததற்கு நன்றி.  ஷ்ரத்தா, எனக்கும் பிரவீனுக்கும் இந்த ரோலுக்கு அவர் தான் மனதில் வந்தார். படத்தின் முதல் 30 நிமிடம் அவர் தான் தாங்கியுள்ளார். மானசா லேட்டாக வந்தார், சிறப்பாக செய்துள்ளார். எல்லாப்படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்கிறேன் இதில் வேண்டாம் என்றார், அதை ஏற்று ஒரு பாடல் செய்தோம் சிறப்பாக வந்துள்ளது. கருணாகரன் என் புரடக்சனில் ஒரு பார்ட்னராகடாக ஆகிவிட்டார். ஆர்யன் என் பையன் பேர். அவர் பேரில் நல்ல படம் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் நன்றி.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *