நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும்: YG மகேந்திரன்

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்”நீ Forever”.

இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்.. நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது..,
முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி

இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியதாவது..,
இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது.  இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம்  அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது..,
இங்கே வந்துள்ள பத்திரிகை நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒரு விஷயம் – நல்ல எண்ணம் இருந்தா நல்ல விஷயம் நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். கடந்த வருடம் தருணம் படத்தை வெளியிட்டேன் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதை வைத்து இப்படத்தை எடுத்து முடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, அதனால் இப்படத்தை முழுதாக நிறுத்த வேண்டிய சூழல். ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, இயக்குநர் அசோக் உடைய முயற்சி, படக்குழுவினரின் கடும் உழைப்பால் இப்படம் உருவானது. இந்த படம் உருவாகும் போது எங்களுக்குள் நிறைய சவால்கள் இருந்தது. ஆனாலும் அந்த சாவால்களை  கடந்து, இந்த படத்தை ஒரு நல்ல படமாக கொண்டு வந்திருக்கிறோம். முதலில் வேறு நடிகர்கள் தான் நடிப்பதாக இருந்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு, தர்ஷன் அர்ச்சனா நடித்துள்ளனர்.  ஒவ்வொருவரும் இந்த படத்துக்காக மனதார உழைத்திருக்கிறார்கள். YG மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். இசையமைப்பாளருக்கு நிறைய கஷ்டம் தந்தேன், ஆனால் அவர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதர்ஷன் தினமும் ஆபிஸ் வந்தார். அவ்வளவு ஆதரவாக இருந்தார்.நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பை தந்துள்ளனர். இவர்கள் அனைவராலும் தான் இப்படம் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *