திரையுலக பிரபலங்களும், முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த திரைப்படம் சித்தார்த் அபிமன்யு தயாரிப்பில் உருவாகியுள்ளது.திரு.கரு துரைராஜன் இயக்கி இசையும் அமைத்துள்ளார்.தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை ராஜசேகர் நாயுடு கவனித்துள்ளார்.படத்தொகுப்பை
கார்த்தி பாண்டியன் செய்துள்ளார், கலை இயக்கத்தை அர்ச்சனா கண்ணன் மேற்கொண்டுள்ளதுடன்,
பின்னணி இசையை விஜய் பிரபு வழங்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் மகிழன் பரிதி, மதுமிதா ஆகியோர் பின்னணி பாடகர்களாக அறிமுகமாகின்றனர். வணக்கம் பண்ணையார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் காதல் சுகுமார், கிரேன் மனோகர், ரஞ்சன், அஸ்வினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பழம்பெரும் நடிகர் நகைச்சுவை மன்னன் *நாகேஷ் அவர்களின் மகனும், பிரபல நடிகருமான ஆனந்த் பாபு கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புச்செல்வன்,
நம் மண்ணின் மக்கள் கட்சித் தலைவர் ஆரிப் அலி,
தமிழ் ஃபிலிம் ப்ரொட்யூசர் கவுன்சில் லைஃப் மெம்பர் டாக்டர் கே. கருணாகரன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
