‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ 19ம் தேதி மறு வெளியிடு 

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.

விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது. மனதைத் தொடும், மக்களின் மொழியை பேசும் திரைப்படமான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மறு வெளியிட்டின் போதும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெறும் என்று தயாரிப்பாளர்களான ஏ ஆர் என்டர்டெயின்மென்ட், டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிவிஆர் சினிமாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரதன் இசையமைத்திருந்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்திற்கு மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவு மேற்கொள்ள பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு செய்திருந்தார். வசனங்களை மணிகண்டன் கே எழுத ஏ ஃபெலிக்ஸ் ராஜா மற்றும் மனோஜ் குமார் கலை இயக்கத்தை கையாண்டிருந்தனர். நடனம்: தினேஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்; பாடல்கள்: சினேகன், ஆர் ஜே விஜய், மாதேவன், ராகேந்து மெளலி மற்றும் எம் சி சேத்தன்; உடைகள் வடிவமைப்பு: பிரியா ஹரி மற்றும் பிரியா கரன்; சவுண்ட் எபெக்ட் மற்றும் டிசைன்: சூரேன் ஜி மற்றும் அழகியக்கூத்தன்; டி ஐ: சேது செல்வம்; வி எஃப் எக்ஸ்: அக்ஷா ஸ்டுடியோஸ்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; பப்ளிசிட்டி டிசைன்ஸ்: என்டாக்கீஸ்; ஸ்டில்ஸ்: சந்துரு; சப்டைட்டில்ஸ்: ரேக்ஸ்.

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி  பாராட்டுகளை குவித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுகிறது.

“அமரன்”க்கு கிடைத்த கௌரவம் !

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட “அமரன்” திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது…

Read More

“வித் லவ்” ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்…

Read More

தமிழ் சினிமாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் உருவானால் எந்த நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களில் பொருந்திப் போவார்கள்?

‘ஜூடோபியா’ திரைப்படம் தமிழில் உருவாகும்போது உணர்வுப்பூர்வமான, ஸ்டைலிஷான அதிரடி சாகசங்களுடன் அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும்….

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *