காசு இல்லையா கடன் வாங்கி செலவு பண்ணுங்க

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’ அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது
 
 
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
 
அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும்  ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
 
“சாந்தீ… பணம்  சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?” எனும் சமுத்திரக்கனியின் குரலோடு தொடங்கும் டீசர் பின்னர் பலரது குரல்களோடு சம்பாதிப்பதற்கான பல்வேறு வழிகளை வெளிப்படுத்தி பணம் எப்படி வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சுவைபட எடுத்துரைக்கிறது.
 
சீரியஸான விஷயங்களை கூட சிம்பிளாகவும் சிரிப்பு வர வைக்கும் வகையிலும் வெளிப்படுத்தும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர், பணத் தேவை மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதை இன்றைய கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் சொல்கிறது.
 
சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். மனைவியோடும் மகனோடும் ஒரு குடும்பத் தலைவராக காட்டப்படும் சமுத்திரக்கனி, பின்னர் வெளிநாடுகளில் தனியாக இருப்பது போல் டீசர் காட்டுகிறது கௌதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்புகளை டீசர் ஏற்றுகிறது.
 
“பணக்காரன் ஆகணும்னா பணக்காரனா வாழ கத்துக்கணும், காசு இல்லையா கடன் வாங்கி செலவு பண்ணு” என்று சமுத்திரக்கனி சொல்வதோடு நிறைவடையும் டீசர் பார்வையாளர்களை ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது.  
 
சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமிபிரியா, அபிநயா உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படம் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் தாங்கி வருகிறது.
 
‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசையை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைத்துள்ளார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா.
 
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் திரைப்படம் அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

ரஜினி சாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றேன் : பிரசாத் லோகேஸ்வரன்

ஜெர்மனியில் குடியேறிய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரசாத் லோகேஸ்வரன், தமிழ் சினிமா மீதான தனது ஆர்வத்தைத் தொடர முடிவு செய்துள்ளார்….

Read More

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லர்

இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில்,  ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும்,  காந்தாரா: சேப்டர்…

Read More

விஜய்யை மீண்டும் இப்படி பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது : SJ சூர்யா 

ஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்…

Read More

3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்தேன் :   சாந்தனு

தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி. இப்படத்தை இயக்கியதன்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *