‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ துவக்கம் !

ஐசரி K கணேஷ் அவர்கள் தனது பிறந்தநாளில் “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஐசரி  K கணேஷ், இன்று அதிகாரப்பூர்வமாக “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு, இசை, திரையரங்குகள், போஸ்ட் புரொடக்சன் மற்றும் ஸ்டூடியோ வசதிகள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து, 360° முழுமையான பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

தமிழ்நாட்டின் முன்னணி பப்ளிக் லிமிடெட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தன்னுடைய அனைத்து படைப்பு மற்றும் வணிக நிறுவனங்களையும் ஒரே பிராண்டின் கீழ் ஒருங்கிணைத்து, முழுமையான IP உரிமையை பெற்று, முதலீட்டாளர்களுக்கான நீண்டகால மதிப்பை உறுதி செய்துள்ளது.

“இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி,” என்று டாக்டர் ஐசரி K. கணேஷ் கூறியுள்ளார்.., மேலும்
“உலக இசைத்துறையில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் இணைந்து முன்னேற வேண்டும். தமிழ்த் திறமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தளமாக ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ உருவாகியுள்ளது. இது ஒரு சாதாரண மியூசிக் லேபிள் அல்ல — நாளைய இசையை  உருவாக்கும் இயக்கம். தொழில்நுட்பம், திறமை, கதை சொல்லல் ஆகியவை ஒன்று சேரும் தென்னிந்தியாவின் படைப்பாற்றல் மையமாக ‘வேல்ஸ்’ உருவாகும். மேலும் எனது பிறந்தநாளில் ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தை தொடங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *