அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும்  “காட்டாளன்” 

க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்‌ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.  எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார் — இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது. ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்‌ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது.

பான்-இந்தியா ஹிட் ஆக்‌ஷன் திரில்லர் *“மார்கோ”*விற்கு பின், “காட்டாளன்” படம் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மற்றொரு மிகப்பெரும் முயற்சியாக அமைந்துள்ளது.

புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் “காட்டாளன்”, மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது. பான்-இந்தியா பிரம்மாண்டம் என்ற கான்செப்டில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாராகிறது. தாய்லாந்தில் நடந்த அதிரடி காட்சிகள் படப்பிடிப்பின் போது, யானை சம்பந்தமான காட்சியில் ஆண்டனி காயம் அடைந்தார். உலகப் புகழ் பெற்ற “Ong-Bak” படத்தொடரின் ஆக்‌ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவரது நிபுணர் குழுவே இந்த ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், “Ong-Bak” படத்தில் புகழ்பெற்ற யானை பொங் இதிலும் நடித்துள்ளது.

படத்திற்கான இசையை “காந்தாரா”, “மகாராஜா” போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சுனில் (Pushpa, Jailer 2), கபீர் துகான் சிங் (Marco), ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு (Pushpa), பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி (Kill movie fame) ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத் திரையுலகிலிருந்து ஜகதீஷ், சித்திக், மற்றும் VLogger-பாடகி ஹனான் ஷா இணைந்துள்ளனர்.

திரைக்கதை ஜோபி வர்கீஸ், பால் ஜார்ஜ், மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்; உரையாடலை உன்னி ஆர் எழுதியுள்ளார். படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *