BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “ரெட்ட தல” திரைப்படம், வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் அறிவிப்பு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடையேயும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
முழுக்க முழுக்க ஸ்டைலீஷாக ஆக்சன், ரொமான்ஸ் கலந்து, ஒரு கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில், இரட்டை வேடத்தில் மிரட்டியிருக்கிறார்.
நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். முன்னதாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில், வெளியான ஹாரர் திரைப்படமான “டிமாண்டி காலனி 2” ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அடுத்ததாக இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில், நடிகர்கள் வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் வெளியான “சென்னை சிட்டி கேங்ஸ்டர்” திரைப்படமும், பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த இரண்டு திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர் திரு.பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இப்படம் வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
