முன்னணி கன்னட தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ் படம்!

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ், தனது மிகப்பெரிய வெற்றிப் படமான ’S/o முத்தண்ணா’ மூலம் பரவலாக அறியப்பட்டது. தற்போது ’எம்ஜிஆர்’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர் ஹரி பிரசாத் பி.வி தலைமையிலான இந்த நிறுவனம், தற்போது தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த புதிய படத்தின் கதாநாயகனுக்காக தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் செல்வராகவனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ’S/o முத்தண்ணா’ மற்றும் ’எம்ஜிஆர்’ படங்களில் இணைந்து பணியாற்றிய திறமையான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஹுன்சூர் இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய தமிழ் படத்தை இயக்குகிறார்.

ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ஹரி பிரசாத் கூறுகையில், “இந்திய சினிமாவில் தமிழ் சினிமா துறைக்கென்று எப்போது சிறப்பான இடம் உண்டு. புதுமை, சிறந்த கதைகள் மற்றும் தனித்துவமான படங்கள் ஆகியவற்றிற்காக தமிழ் சினிமா கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் கனவு இந்தப் படம் மூலம் நிறைவேறுவது மகிழ்ச்சி. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இந்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “இந்த புதிய படத்தில் நடிகர் செல்வராகவன் இணைந்திருப்பது கூடுதல் பலம். அவரின் திறமையான நடிப்பு, திரை ஆளுமை மற்றும் சினிமாவிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்த படத்திற்கு பெரும் பலமாக இருக்கும். இப்படத்திற்கு கன்னட திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான சரண் ராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஸ்கேட்டிங் கிருஷ்ணா மேற்கொள்கிறார்.

படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *